கண்ணாடிக்கு பதிலாக கான்டாக்ட் லென்ஸ்கள் அணிகிறோம். அதிலும், சிலர் இதை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்கவும்.
காண்டாக்ட் லென்ஸூடன் தூங்கி விட்டால் கண்களில் தொற்று ஏற்படலாம். எனவே, தூங்குவதற்கு முன் காண்டாக்ட் லென்ஸை அகற்றி விட வேண்டும்.
அதேபோல் லென்ஸ்கள் போடுவதற்கு முன் கண்களுக்கு மஸ்காரா உள்ளிட்ட மேக்கப் பொருட்களை பயன்படுத்தினாலும் கண்களில் தொற்று ஏற்படலாம்.
கண்களில் தொற்று ஏற்பட்டால் லென்ஸை அணியும் போதும், அகற்றிய பிறகும் கண் எரிச்சல் மற்றும் அரிப்பு இருப்பது போன்று உணரலாம்.
காண்டாக்ட் லென்ஸ்களை வெகு நேரம் போட்டிருந்தால் கண்களில் வறட்சி ஏற்படும். எனவே, சிறிது இடைவெளி விட்டு போட வேண்டும்.
காண்டாக்ட் லென்ஸ்களை சரியாக பராமரிக்கவில்லை என்றால், அது தொற்று ஏற்படுத்துவதோடு பார்வை இழப்புக்கு கூட வழிவகுத்துவிடும்.
ஆகமொத்தம் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள் அதை பயன்படுத்துவதற்கு முன், அதற்கான திரவம் கொண்டு சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு முறையும் லென்ஸ்களை பயன்படுத்தும் போது திரவத்தை மாற்றி, அதன் கேஸை சுத்தம் செய்ய வேண்டும்.