Sidhanathan K       Jan 26, 2024

குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதா..? கெட்டதா..?

அரிசி இந்தியாவின் பாரம்பரிய உணவு. அதேபோல், ஜப்பானியர்களின் முக்கியமான உணவும் கூட இந்த அரிசி தான்.

பாரம்பரியமாக அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து, வெந்ததும் கஞ்சி வடித்து சாதத்தை சாப்பிடுவோம்.

ஆனால் தற்போது நமது வீட்டு வேலைகளை எளிதாக்கும் வகையில் விரைவில் சமைப்பதற்காக குக்கரை பயன்படுத்துகிறோம். அப்படி குக்கர் சாதம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்தும் நிலவுகிறது.

அந்தவகையில் குக்கர் சாதம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

சாதத்தை வடித்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. ஏனென்றால் வடிக்கும்போது அரிசியின் மேல்பகுதியில் உள்ள மாவுச்சத்து (ஸ்டார்ச்) நீக்கப்படுகிறது.

பொதுவாக ஸ்டார்ச் தான் ஒருவரின் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாகும். அதாவது வடித்து சமைக்கும் சாதத்தில் 30% முதல் 40% மாவுச்சத்து குறைவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தாது.

அதேபோல், சாதத்தை வடித்து சாப்பிடுவதால் உடல் எடையும் அதிகரிகாது. அதனால் தான் பழங்காலத்திலிருந்தே நாம் அரிசியை வடித்து சாப்பிடுகின்றோம்.

மறுபுறம், அரிசியை குக்கரில் சமைக்கும்போது, புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் சாதத்தில் முழுமையாக இருந்துவிடுகிறது. இதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் குக்கரில் சமைக்கும் சாப்பாட்டில் கஞ்சி நீக்கபடவில்லை என்பதால் கலோரி குளுக்கோஸ் அளவு அதிகம் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

அது மட்டுமல்லாமல், அரிசி வேக எவ்வளவு நேரம் எடுத்து கொள்கிறதோ அந்த அளவுக்கு சாப்பிட உடலுக்கு நல்லது.

குக்கர் சாதம் செரிமானத்திற்கு நல்லது. அதேநேரம், அதிக அழுத்தத்தில் சாதத்தை சமைக்கும் போது, அரிசியில் உள்ள பூஞ்சை மற்றும் பிற பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன.

புள்ளி விவரங்களின் படி, வடித்த சாதத்தை காட்டிலும், குக்கர் சாதம் அதிக நன்மைகளை கொண்டுள்ளது. அதற்காக வடித்த சாதம் குறைவான நன்மைகளை வழங்குகிறது என்று சொல்லவும் முடியாது.

வடித்த சாதமும் குக்கர் சாதத்திற்கு இணையான நன்மைகளை வழங்குகிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் வடித்த சாதம் சாப்பிடுவதே நல்லது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories