Tap to Read ➤

வேர்க்கடலையில் உள்ள எண்ணற்ற மருத்துவ பலன்கள்!

பல நன்மைகளை கொண்டுள்ள வேர்க்கடலையை அளவோடு உண்டு வளமோடு வாழ்வோம்.
HTML Tamil
வேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாது. குழந்தைப்பேறும் சிரமின்றி உண்டாகும்.
வேர்க்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக்குவதோடு, மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது.
உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
வேர்க்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளதால், இதய வால்வுகளைப் பாதுகாத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
வேர்க்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்துக்கள், தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து, நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கிறது.
வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால், மூளை நரம்புகள் தூண்டப்பட்டு மூளை உற்சாகமடைகிறது. வேர்க்கடலை மன அழுத்தத்தையும் போக்க உதவுகிறது.
வேர்க்கடலையில் மூளை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், நியாசின் உள்ளதால், ஞாபக சக்தி அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
வேர்க்கடலையை தினமும் 30 கிராம் சாப்பிட்டு வந்தால், பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.  நீரழிவு நோயும் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
இளமையை பராமரிக்க வேர்க்கடலை மிகவும் உதவுகிறது. நோய் வருவதை தடுத்து, இளமையை பராமரிக்கவும் இது பெரிதும் உதவுகிறது
வேர்க்கடலையில் உள்ள ஒமேகா-3 என்ற சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுகிறது.
நொறுக்குத் தீனி, பொரித்த உணவுகளை நீக்கிவிட்டு வேர்க்கடலையை தினமும் ஒரு கைப்பிடி உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.