Tap to Read ➤

உடல் எடையை குறைக்க உதவும் நாட்டு சர்க்கரை...!

இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் இருக்கும் நாட்டு சர்க்கரையில் பல நன்மைகள் உள்ளன.
HTML Tamil
குறைந்த அளவே கலோரிகள் உள்ள நாட்டு சர்க்கரையில், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
வெள்ளை சர்க்கரையை விட கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.
ஆஸ்துமா, மூச்சு வாங்குதல், நுரையீரல் உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் தினசரி டீ, காஃப்பிக்கு நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.
அஜீரணம், வயிற்றுக் கோளாறு, மலச்சிக்கல் உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள், நாட்டுச் சர்க்கரையை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சோர்வாக இருப்பவர்களும், களைப்பாக இருப்பவர்களும் ஒரு ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை சாப்பிட்டால், களைப்பு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.
நாட்டுச் சர்க்கரையை, ஓமத்துடன் கலந்து, தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து குடித்தால் சளி, இருமல் தொல்லை உடனே சரியாகிவிடும்.
நாட்டு சர்க்கரையில் வைட்டமின் பி இருப்பதால், சருமச் செல்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, புதிய செல்களையும் உருவாக்குகிறது.
வாழைப்பழத்தை குழைத்து, நாட்டுச் சர்க்கரையுடன் கலந்து முகத்தில் பூசினால், முகம், பொலிவு மற்றும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
வெள்ளை சர்க்கரையில் உள்ள வேதிப்பொருட்கள் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது.