Tap to Read ➤

3 மாதம் ஆனாலும் கெட்டுப் போகாத பசும்பால்!!

பாக்டீரியா இல்லாத ஆவின் 'டிலைட்'
Sidhanathan K
தமிழக அரசின் பால்வளத்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆவின் நிறுவனம் செயல்படுகிறது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் தினமும் பல லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது.
இதுதவிர ஆவின் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் ஆவின் பால் பொருட்களான நெய், பன்னீர், வெண்ணெய், இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
நேரடியாகவும், முகவர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆவின் நிறுவனம் புதிய வகை பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூன்று மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமான பசும்பாலை தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
புதிய வடிவமான 'ஆவின்' டிலைட்' பச்சை நிறத்தில் 500 மி.லி. என்ற அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.
பிரிட்ஜ் வசதி இல்லாதவர்களும் 3 மாதங்கள் வரை இந்த பாலை பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
தற்போது அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 30 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாலுக்காக மக்கள் அவதிப்பட மாட்டார்கள் என்றும், பால் பவுடரை விட இந்த பாலை பயன்படுத்துவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆவின் டிலைட் 3.5 சதவிகித கொழுப்பு மற்றும் பூஜ்ஜிய சதவிகிதம் பாக்டீரியா உடன் தயாரிக்கப்பட்டுள்ளது.