Varalakshmi N       Jul 01, 2026

வெளியே மொறுமொறு... உள்ளே ஜூசி – சுக்கா சாப்ஸ்!

AI-IMAGE

சுக்கா சாப்ஸ் என்பது காரசாரமான மசாலா சுவையுடன், வெளிப்புறம்       மொறுமொறுப்பாகவும் உள்ளே மென்மையாகவும் இருக்கும் பிரபலமான அசைவ  உணவாகும்.

மதிய உணவு, இரவு உணவு அல்லது சிற்றுண்டியாகவும் பரிமாற ஏற்ற இந்த உணவை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சாப்ஸ் கறி – ½ கிலோ, மிளகாய்த்தூள் – 2       தேக்கரண்டி, கடலை மாவு – 2 தேக்கரண்டி, அரிசி மாவு – 2 தேக்கரண்டி,  மைதா மாவு – 2 தேக்கரண்டி, வினிகர் – 2 தேக்கரண்டி, கேசரி பவுடர் – 1 சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை – முறை 1: ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு,       வினிகர், கேசரி பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு  கலக்கவும்.

சிறு துண்டுகளாக நறுக்கிய சாப்ஸ் கறியை இதில் சேர்த்து, மசாலா       எல்லாப் பகுதிகளிலும் நன்றாக படுமாறு பிரட்டி விடவும்.

இதை சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும்.

இதை சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் காய்ந்த எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும்.

மைதா, கடலை மாவு, அரிசி மாவு சேர்ப்பதற்குப் பதிலாக, மிளகாய்த்தூள்,  உப்பு, கேசரி பவுடர் மற்றும் வினிகர் சேர்த்து கறியை நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

ஊறிய கறித் துண்டுகளை அடித்து வைத்துள்ள முட்டையில் தோய்த்து,       பின்னர் ரஸ்க் தூளில் நன்றாகப் புரட்டவும். காய்ந்த எண்ணெயில் போட்டு  பொன்னிறமாக மொறுமொறுப்பாக பொரித்தெடுக்கவும்.

சுவையான, மொறுமொறுப்பான சுக்கா சாப்ஸ் பரிமாறத் தயாராகிவிட்டது. சுவை நிறைந்த சுக்கா சாப்ஸ், விருந்துகள் மற்றும் குடும்ப ஒன்றுகூடல்களுக்கு சிறந்த அசைவ உணவாகும்.

தக்காளி சாஸ், புதினா சட்னி அல்லது வெங்காயச் சாலட்டுடன் பரிமாறினால்  இதன் சுவை மேலும் சிறப்பாக இருக்கும்.