மாலை நேர தேநீருடன் சாப்பிட மிகவும் பொருத்தமான சிற்றுண்டி தான் பூண்டு காராசேவ். பூண்டின் நறுமணமும், மிளகின் காரமும் இந்த காராசேவுக்கு தனித்துவமான சுவையை தருகின்றன
வீட்டிலேயே மிக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய இந்த ரெசிபி அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது
தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – ½ கப், பூண்டு பல் – 5, பச்சை மிளகாய் – 5, வெண்ணெய் – 1 டீஸ்பூன், மிளகு பொடி – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை: முதலில் பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர்'சேர்த்து கலக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகு பொடி, வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். வடிகட்டிய பூண்டு மிளகாய் தண்ணீரை சேர்த்து கெட்டியான மாவாக பிசையவும்
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், காராசேவ் அச்சு எடுத்து அதில் மாவை வைத்து எண்ணெயில் பிழியவும்
நன்றாக வெந்து பொன்னிறமாக வந்ததும் காராசேவையை எடுத்து வடிகட்டி விடவும். சுவையான மொறுமொறுக்கும் பூண்டு காராசேவ் தயார்