கோடைகாலத்தில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் முக்கியமானது வெள்ளரிக்காய். உலகளவில் சுமார் 30 வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சி அளித்து, சிறுநீரை அதிகரிக்க உதவுகிறது, மேலும் குடல் புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டது.
இதில் வைட்டமின் B & C அதிகமாக உள்ளன. வெள்ளரிக்காய் விதைகள் ஆயுர்வேதம், யூனானி மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கு உதவும் மருந்தாகவும் பல்வேறு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வெள்ளரிக்காய் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிது பாளை கலந்து முகம் முழுவதும் தடவி, 1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
வாரம் 2-3 முறை செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும், பருக்கள் குறையும், உடலில் ஏற்படும் வறட்சித்தன்மை, தோல் சுருக்கம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது
மொத்தத்தில், கோடைகாலத்தில் வெள்ளரிக்காயை தினமும் சேர்த்து கொண்டால் உடலும், தோலும் ஆரோக்கியமாக இருக்கும்