Varalakshmi N       Nov 19, 2023

பல்வேறு நோய்களை குணமாக்கும்... கடுக்காய் கஷாயம்!

கடுக்காய் மருத்துவத்தில் மிக  சிறப்பான நன்மைகளையும், பல வித       நோய்களுக்கு நல் மருந்தாக செயல்படுகிறது

மஞ்சள் காமாலை, இருமல், மூலம், தொண்டை புண்கள், அஜீரணம்,       கண்வலி, நீரிழிவு, விக்கல் போன்ற வியாதிகளை குணமாக்கும் ஆற்றல் உள்ளது

கடுக்காயை தோலை நீக்கி, பொடியாக்கி சுத்தமான பாட்டிலில்       பத்திரப்படுத்திக் கொள்ளவும்

தினமும் காலை மாலை என இருவேளையும் இந்த பொடியில் ஒரு கிராம் அளவு எடுத்து சிறிது தேன்  கலந்து சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட  நோய்கள் நீங்கும்

கடுக்காயை கஷாயம் காய்ச்சி குடித்தால், வயிற்றில் உள்ள பூச்சிகள்       மலத்துடன் வெளியேறிவிடும்

கடுக்காய் கஷாயத்தில் ஒரு சில துளிகள் கண்களில் விட கண் நோய்       குணமாக்கும்

கடுக்காய் பொடியை கொஞ்சமாக எடுத்து பல்பொடியில் கலந்து பல் துலக்கி  வந்தால், பல் வலி நீங்கும்