பருப்பு உசிலி என்பது தமிழ்நாட்டின் பாரம்பரியமான சத்தான மற்றும் சுவையான ஒரு காய்கறி உணவு. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்
பீன்ஸ் -1/4 கப் (பொடியாக நறுக்கியது), கடலை மாவு – 1/2 கப், கடுகு – 1/2 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், எண்ணெய் மற்றும் உப்பு – தேவையான அளவு
நறுக்கிய பீன்ஸில் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவைத்து தனியாக வைத்துக்கொள்ளவும்
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். அதில் கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சில நிமிடங்கள் வதக்கவும்
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும். அதில் வேகவைத்த பீன்ஸை சேர்த்து 5-7 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்
மிக குறைந்த நேரத்தில் எளிதாக தயாரிக்கக்கூடிய சுவையான பருப்பு உசிலி தயார். இதை சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்