ஃப்ரிட்ஜ் வாட்டர் தொண்டைக்கு இதமாக இருந்தாலும், சில பக்கவிளைவுகளும் உண்டு.
ஐஸ் வாட்டர் குடித்தால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தாகம் எடுக்குமே தவிர, தாகம் தணியாது.
ஐஸ் வாட்டரை குடிப்பதால் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டையில் வீக்கம் ஏற்படலாம்.
சில சமயங்களில் நாசி நெரிசல் கூட ஏற்படும்.
இதனால் உடலின் செரிமான செயல்பாடுகள் தடைபடுகின்றன. செரிமானம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.
சாப்பிட்ட பிறகு ஐஸ் வாட்டரை குடிப்பதால், செரிக்கப்படாத கொழுப்புகள் உடலில் தங்கி, உடல் பருமனை அதிகரிக்கும்.
ஐஸ் வாட்டர் குடிப்பதால் பல் உணர்திறன், மெல்லுவதில் சிரமம் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஐஸ் வாட்டர் குடிப்பதால் இதயத்திற்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, இதயத் துடிப்பு குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உடற்பயிற்சி அல்லது கடின உழைப்புக்கு பிறகு குளிர்ந்த நீரை பருகுவது உடலுக்கு திடீரென மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வை உண்டாக்கும்.