Sidhanathan K       Oct 28, 2023

கடுக்காய் அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்..!!

மருத்துவ குணம் கொண்ட கடுக்காய் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகள் என்றாலும், பக்கவிளைவுகளும் உண்டு. இந்த கடுக்காய் அதிகமாக உட்கொள்வது நம் உடலுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

கடுக்காய் அதிகமாக உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும்.

இதனால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் குடல் புண்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடும் போது காய்ச்சல், வாந்தி, குமட்டல், நீரிழப்பு மற்றும் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இது உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் கடுக்காய் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இந்த கடுக்காய் சாப்பிடுவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.

உடலில் அரிப்பு, தோல் வறட்சி மற்றும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் கடுக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

பொதுவாக கடுக்காய் சாப்பிடும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், கடுக்காய் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories