Sidhanathan K       Feb 04, 2025

சப்யூங்குவல் மெலனோமா புற்றுநோயின் முக்கியமான சில அறிகுறிகள்..!!

விரல் நகங்களில் கருமையான கோடு தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் அது ஒரு வகையான சரும புற்றுநோயான சப்யூங்குவல் மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம்.

சப்யூங்குவல் மெலனோமா நக படுக்கையில் கருப்பு-பழுப்பு நிறமாற்றத்தை ஏற்படுத்தும். இது நகங்களில் கருப்பு நிற கோடாகவோ அல்லது நகங்களின் ஒரு பகுதி முற்றிலும் நிறம் மாறியோ காணப்படலாம். 

எங்கும் அடிபடாமல் நகங்களில் அடர் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் கோடுகள் காணப்படும். இந்த கோடுகள் காலப்போக்கில் பெரிதாகும்.

நகங்கள் வளர்ந்தாலும், அந்த கருமை நிற கோடு மறையாமல் அப்படியே இருக்கும். அதோடு நகத்தைச் சுற்றியுள்ள தோலும் கருமையாகும்.

நகங்களில் இரத்தக்கசிவு அல்லது கட்டிகள் உருவாகத் தொடங்கும். கைவிரல் மற்றும் கால் விரல் நகங்கள் நகப்படுக்கையில் இருந்து பிரியும்.

நகத்தட்டுகள் மிகவும் மெல்லியதாக, விரிசல் அல்லது சேதமடையத் தொடங்கலாம்.

இங்கு கூறப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது.