Tap to Read ➤

'உலகின் அழுக்கு மனிதர்' மரணம்

'உலகின் அழுக்கு மனிதர்' என வர்ணிக்கப்பட்ட ஈரானியர் காலமானார்.
HTML Tamil
ஈரானின் பார்சில் மாகாணம் தேஜ்கா கிராமத்தில் அமோவ் ஹாஜி என்பவர் வசித்து வந்துள்ளார்.
குளித்தால் நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தால், இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குளிக்காமல் இருந்துள்ளார்.
தனது உடல் எவ்வளவு அழுக்காக இருக்கிறதோ, அந்த அளவுக்கு தனக்கு நோய் வராது என்பது, அமோவ் ஹாஜியின் நம்பிக்கையாக இருந்துள்ளது.
தண்ணீர் பக்கம் எட்டிக்கூட பார்க்காததால், உடல் முழுவதும் புழுதி படிந்து, அமோவ் ஹாஜி அழுக்காகவே காட்சியளித்தார்.
இதனால் அமோவ் ஹாஜி, 'உலகின் அழுக்கு மனிதர்' என வர்ணிக்கப்பட்டு வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு, கிராம மக்கள் ஒன்றுகூடி, அமோவ்வை வலுக்கட்டாயமாக குளிக்க வைத்துள்ளனர்.
இதன் மூலம் 64 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமோவ் ஹாஜி குளித்ததாக கூறப்படுகிறது.
இறந்த விலங்குகளின் அழுகிய உடற் பாகங்களை ஆர்வமுடன் சாப்பிடுவதை அமோவ் ஹாஜி வழக்கமாக கொண்டிருந்தார்.
பொதுமக்கள் கட்டிக்கொடுத்த குடிசை வீட்டில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவால், தனது 94 வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார்.
உலகின் அழுக்கு மனிதரான அமோவ் ஹாஜி குறித்து, கடந்த 2013-ல், 'தி ஸ்ட்ரேன்ஜ் லைஃப் ஆப் அமோவ் ஹாஜி' என்ற குறும்படம் வெளியானது.