Tap to Read ➤

அணு ஆயுத சோதனை! நிலவையும் விட்டுவைக்காத அமெரிக்கா

US government's Advanced Aerospace Threat Identification Program reveals plan to conduct Nuke tests in Moon.
நிலவில் அமெரிக்கா செய்யத் திட்டமிட்டிருந்த ஆய்வுகள் குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது
2007 முதல் 2012 வரை செயல்பாட்டில் இருந்த AATIP அமைப்பின் ரகசிய ஆவணங்களின் ஒரு பகுதி, தற்போது வெளியாகி உள்ளது
கண்ணுக்குத் தெரியாத ஆடைகள், புவியீர்ப்பு எதிரான கருவிகள், வார்ம் ஹோல்கள் ஆகியவை குறித்து சோதனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது
குறிப்பாக நிலவில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி சுரங்கம் அமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது
இருப்பினும், இதில் உள்ள எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
இந்த ஆய்வுகளைச் செய்ய திட்டமிட்டிருந்த ஏ.ஏ.டி.ஐ.பி. நிறுவனம், கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இருந்தது
மேம்பட்ட அதிநவீன ராணுவ ஆயுதங்களை உருவாக்குவதில் இந்த நிறுவனம் தீவிர சோதனை நடத்தியது தெரிய வந்துள்ளது
இந்த நிறுவனத்தின் ஆய்வு முறை குறித்த தகவல் வெளியான பின்னர், கடந்த 2012இல் இது மூடப்பட்டது
அமெரிக்கா மீண்டும் நிலவு ஆய்வு திட்டத்தைத் தொடங்க உள்ள நிலையில், இந்த ரகசிய ஆவணங்களின் தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது