Varalakshmi N       Mar 23, 2026

 10 நிமிடங்களில் மொறு மொறு சுவையான ஓமப்பொடி- சுலபமான ரெசிபி!

மொறு மொறுப்பான ஓமப்பொடி என்பது அனைவரும் விரும்பும் ஒரு சுவையான சிற்றுண்டி.இதை வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்யலாம்

தேவையான பொருட்கள்: கடலை மாவு – 1 கப், அரிசி மாவு – 1/4 கப், ஓமம் –     1/2 டீஸ்பூன் (பொடியாக அரைத்தது), உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

முதலில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம் போடி மற்றும் உப்பை ஒன்றாக     சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவாக     பிசையவும்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும். முறுக்கு அச்சில் ஓமப்பொடி தட்டை வைத்து அதன் உள்ளே ஒரு உருண்டை மாவை வைத்து சூடான எண்ணெயில் பிழியவும்

அது பொன்னிறமாக வரும் வரை பொரித்து பின்னர் எண்ணெயை வடிகட்டி எடுத்துவிடவும், இதை தேநீர் நேரத்தில் ருசித்து மகிழலாம்