Varalakshmi N       Feb 05, 2026

 சுவையான கோழி கபாப் ஸ்நாக்  - மொறு மொறுவென வீட்டிலேயே...! 

மசாலாவின் மணமும், மொறு மொறுமொறுப்பான தோற்றமும் கொண்ட கோழி கபாப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் சுவையான சைடு டிஷ்  ஆகும்

மொறுமொறுப்பான கோழி கபாப் செய்வது எப்படி என்பதை இங்கே பார்ப்போம்

தேவையான பொருட்கள்: கோழிக்கறி -1/2, கடலை மாவு -1 கப், கரம் மசாலா - 1     ஸ்பூன், மிளகு பொடி - 1 ஸ்பூன், மஞ்சள்தூள் - 1 ஸ்பூன், சோடா உப்பு     -1/4 ஸ்பூன், கொத்தமல்லித்தழை -1 கப், புதினா தழை -1 கப், எண்ணெய்     பொரிப்பதற்கு, உப்பு தேவையான அளவு

செய்முறை: கோழிக்கறியுள்ள எலும்புகளை நீக்கிக் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்

சோடா உப்பை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும். அரைத்த மசாலாவில் சோடா உப்பை சேர்த்து நன்றாக பிசையவும்

அதில் கோழிக்கறியை சேர்த்து மீண்டும் நன்றாக பிசைந்து சிறு சிறு     உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழி உருண்டைகளை போட்டு பொன்னிறமாகும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும்

இந்த கோழி கபாபுடன் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி சேர்த்து பரிமாறினால் சுவை இன்னும் இரட்டிப்பாகும்