மட்டன் கறி என்பது தனித்துவமான இடம் பெற்ற பாரம்பரிய உணவு. சரியான மசாலா கலவையிலும், தேங்காய் பால் சேர்த்து செய்தால் ருசி இன்னும் அதிகமாகும்
தேவையான பொருட்கள்: மட்டன் கறி - 1 கிலோ, மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி, மிளகாய்தூள் - 2 தேக்கரண்டி, வெங்காயம் -2, மிளகு -10, பட்டை -2 துண்டு, தேங்காய் பால் எடுத்து, தக்காளி சாறு - 1/2 கப், மிளகு வற்றல் -3, சோம்பு - 2 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, தனியா - 2 தேக்கரண்டி, என்னை மற்றும் உப்பு தேவையான அளவு
செய்முறை: முதலில் மட்டன் கறியை சுத்தம் செய்து மஞ்சள்தூள் உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும், தேங்காய் தூவி பால் எடுத்துக்கொள்ளவும். சோம்பு, சீரகம் தனியாவை லேசாக வறுத்து அரைத்துக்கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
அதில் அரைத்த மசாலா மற்றும் தக்காளிசாறு சேர்த்து நன்றாக வதக்கவும். ஊறவைத்த மட்டன் கறியை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்
கறி நன்றாக வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும், கடைசியாக சோம்புத்தூள் தூவி கிளறவும்
கறி நன்றாக வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும், கடைசியாக சோம்புத்தூள் தூவி கிளறவும் சூடான சாதம் அல்லது இடியாப்பம், பரோட்டாவுடன் பரிமாறலாம்