Varalakshmi N       Mar 13, 2026

சுவையான சேப்பங்கிழங்கு மசாலா வறுவல்..ரெசிபி!

சேப்பங்கிழங்கு பலருக்கும் பிடித்த ஒரு சுவையான காய்கறி. இதை       மசாலாவுடன் வறுத்து செய்தால் சாதத்துக்கும், சப்பாத்திக்கும் சிறந்த       பக்காரியாக இருக்கும்

இதை எளிய முறையில் மசாலா சேப்பங்கிழங்கு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள்: சேப்பங்கிழங்கு -1/2 கிலோ, வெள்ளை எள்- 1 டேபிள் ஸ்பூன், கரம் மசாலா -1 ஸ்பூன், எலுமிச்சை பழம் -1/2 மூடி, எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு

முதலில் சேப்பங்கிழங்கை நன்றாக வேகவைத்து ஆறவிட்டு தோலை நீக்கவும். பிறகு அவற்றை ஒரே அளவிலான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சேப்பங்கிழங்கு துண்டுகளை லேசாக       பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுத்துக்கொள்ளவும்

மற்றொரு கடாயில் 1 ஸ்பான் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெள்ளை எள்ளை சேர்த்து வெடிக்கவிடவும். கரம் மசாலா, மிளகாய் போடி,  எலுமிச்சை சாறு சேர்த்து வதக்கவும்.

அதில் பொறித்த சேப்பங்கிழங்கு துண்டுகளையும், தேவையான உப்பும்       சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

பின்னர் பொன்னிறமாக வந்ததும் நறுக்கி வாய்த்த கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைக்கவும்.