சமீப காலமாக எடை இழப்பு மற்றும் உடல் பருமன் சிகிச்சையில் யோகர்ட் முக்கிய பங்கு வகிக்கிறது.
பல்வேறு வகையான யோகார்ட்டுகள் சந்தைகளில் கிடைக்கின்றன. அதில் மிகவும் பிரபலமானதும் மற்றும் டயட்டீஷியன்கள் பரிந்துரைப்பதும் கிரேக்க யோகர்ட்டு ஆகும்.
மேலும் யோகர்ட் மாங்கோ, ஸ்ட்ராபெர்ரி, வெண்ணிலா, ப்ளூபெர்ரி சுவைகளில் கிடைக்கிறது.
தயிரை விட யோகர்ட் விலை சற்று அதிகமாகத்தான் இருக்கிறது.
பொதுவாக நம்ம ஊரு தயிரைத்தான் மேற்கத்திய நாடுகள் யோகர்ட் என்ற பெயரில் அழைக்கின்றனர் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் இரண்டுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளன. அவை தயாரிக்கும் முறைகள், பாக்டீரியாவின் அளவுகள் மற்றும் பாலின் தன்மை ஆகியவற்றை பொறுத்தது.
மேலும், இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் அதிலிருந்து நாம் பெறும் புரதத்தின் அளவு.
ஒரு மீடியம் சைஸ் பௌல் தயிரின் மூலம் நமக்கு 3-4 கிராம் அளவு புரதம் கிடைக்கும்.
அதே அளவுள்ள யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் அளவுக்கு புரதச்சத்து கிடைக்கிறது.
தினமும் யோகர்ட் சாப்பிட்டு வருவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்கும் டி-செல்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
உடற்பயிற்சியின் போது ஏற்படும் தசை இறுக்கம் மற்றும் அழுத்தங்களை இந்த யோகர்ட் குறைக்கிறது.