வில்வம் மர இனத்தை சேர்த்து, முள்ளுடையதாக இருக்கும். பெரும்பாலும் சிவன் ஆலயங்களில் வில்வ மரம் வளர்க்கப்பட்டிருக்கும்
வில்வ இலையினை தயாரிக்கப்படும் குடிநீர் அல்லது கஷாயம் பல வித நோய்களை குணமாகும்
ஒரு கை பிடி இலையை நீரில் 8 மணி நேரம் ஊறவைத்து பின்னர் அதை வடிகட்டி நீரை மட்டும் குடிப்பது வில்வக் குடிநீராகும்
இந்த நீரை அதிகாலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் மேக நோய், வாத வலிகள், தீராத வயிற்று வலி தீரும், மூளைக்குப் பலத்தைக் கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்
பழத்தை எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம், எரிச்சல் நீங்கும்
வில்வப் பட்டையை இடித்து தண்ணீர்விட்டு காய்ச்சி பாதியாக சுண்டியதும், ஆற விட்டு குடித்தால் வாயுவத் தொல்லை, விக்கல், மார்பு வலி குணமாகும்