Tap to Read ➤

அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

இந்தியா மட்டுமில்லாமல் அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது.
HTML Tamil
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்தியாவைப் போலவே, பிற நாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடுவது வழக்கம்.
அந்த வகையில் அமெரிக்காவிலும் தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் தீபாவளி பண்டிகையை உற்சாமாக கொண்டாடினார்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில், அமெரிக்க வாழ் இந்தியர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதேபோல், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார்.
இந்தக் கொண்டாட்டத்தில், இந்திய- அமெரிக்கர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
வரும் 24-ம் தேதி, வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளியை கொண்டாட உள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பல்வேறு மாகாண தலைநகரிலும், கவர்னர் மாளிகைகளிலும் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக, தலைநகர் வாஷிங்டனில், இந்திய - அமெரிக்க பிரபலங்கள் குவிந்து வருகின்றனர்.