Tap to Read ➤

இனி இது போன்ற செயலிகளை போனில் இன்ஸ்டால் செய்யாதீர்கள்..!!

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள 16 ஆபத்தான செயலிகள்!!
Sidhanathan K
ப்ளே ஸ்டோரில் தற்போது கிடைக்கும் அப்ளிகேஷன்களின் (ஆப்ஸ்) பாதுகாப்பு அம்சங்களை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
சில அப்ளிகேஷன்கள் அதிக பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றன. ஆனால் டேட்டாவை திருடக்கூடிய சில ஆப்களும் உள்ளன. எனவே சிறந்த பாதுகாப்புடன் கூடிய ஆப்களை மட்டும் பயன்படுத்துவது நல்லது.
இந்நிலையில் கணினி ஆதரவு நிறுவனமான Threat Fabric, வங்கி சார்ந்த தகவல்களைத் திருடும் சில மோசமான செயலிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதுதவிர login information மற்றும் வங்கிக் கணக்கு எண், நிதி விவரங்களைத் திருடும் தன்மையைக் கொண்டது
1. Recover Audio, Images & Videos
2. Codice Fiscale 2022
3. Zetter Authentication
4. File Manager Small, Lite
5. My Finances Tracker
அதேபோல் கடந்த வாரம் கூகுள் நிறுவனம் 16 ஆப்களின் பெயர்களை “ஆபத்தான ஆப்ஸ்” பட்டியலில் வெளியிட்டு, அவற்றை உடனடியாக நீக்கச் சொன்னது.
இந்த 16 ஆப்ஸ்களும், குறிப்பாக பாதுகாப்பு நிறுவனமான McAfee ஆல் அடையாளம் காணப்பட்டு, பின்னர் Google Play Store இலிருந்து அகற்றப்பட்டது.
இவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் பேட்டரி மற்றும் மொபைல் தரவை மிக வேகமாக உறிஞ்சுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1. High-Speed Camera
2. Smart Task Manager
3. Flashlight+
4. Calendar notepad
5. K-Dictionary
6. BusanBus
7. Joycode
8. Currency Converter
9. EzDica
10. Instagram Profile Downloader
11. Ez Notes
12. Flashlight
13. Calculator
14 & 15. Flashlight+ ஆப்பை போலவே இரண்டு ஆப்கள்.
16. Quick Note