Varalakshmi N       Oct 23, 2023

பூச்சி கடிக்கு டக்குனு இதை செய்யுங்க!

பூச்சி, வண்டு இந்த இரண்டும் கடித்த இடத்தில், தோல் சிவந்து தடிப்பாக மாறிவிடும்

இதை அப்படியே விட்டுவிட்டால், ரத்தத்தில் நச்சுத்தன்மை கலந்து, ஒரு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும்

ரத்தத்தில் நச்சுத்தன்மை, மற்றும் தோல் சிவந்து தடிப்பாக இருப்பதற்கும், இந்த மூலிகையை பயன்படுத்தினால் விரைவில் வீக்கம் மற்றும் நச்சுத்தன்மை  நீங்கும்

குப்பைமேனி, புதினா, கொத்தமல்லி, வல்லாரை இவைகளை வெய்யிலில் உலர்த்தி பொடியாக்கி கொள்ளவும்

இந்த மருந்துடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து பூச்சி கடித்த  இடத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு சீகைக்காய்தூள் போடு கழுவ வேண்டும்

தொடர்ந்து 3-5 நாட்கள் வரை செய்து வந்தால் பூச்சி கடி விஷம் நீங்கி, விரைவில் குணமாகும்