LADA என்பது பெரியவர்களில் உள்ள மறைந்திருக்கும் ஆட்டோ இம்யூன் நீரிழிவு நோயை குறிக்கிறது.
இது டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயை ஒத்துப்போவதால் 1 1/2 (ஒன்றரை) நீரிழிவு நோய் என்றும் அழைக்கப்படுகிறது.
உடலின் ஆன்டிபாடிகள் கணையத்தின் இன்சுலின் உருவாக்கும் செல்களை தாக்கும் போது இது நிகழ்கிறது.
இந்த நீரிழிவு நோயின் அறிகுறிகள் 30 வயதிற்கு மேல் தோன்றக்கூடியது.
இயல்பை விட அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், சோர்வு, எடை இழப்பு, பார்வை மாற்றங்கள் மற்றும் கால்களில் கூச்சம் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.
இது டைப் 1 நீரிழிவு நோயை போன்றது என்றாலும், லாடாவில் அறிகுறிகள் தோன்றுவதற்கு ஆறு மாதங்கள் வரை ஆகலாம்.
ஆரம்ப கட்டங்களில், நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்துகள் போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் லாடாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஆனால் படிப்படியாக மோசமடையும் அறிகுறிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படலாம்.
LADA நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் ஆரம்பத்தில் டைப்-2 நீரிழிவு நோய் இருப்பதாக தவறாகக் கண்டறியப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.