Tap to Read ➤

எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த ஸ்டார் ஃப்ரூட்ஸ் பற்றி தெரியுமா ?

ஸ்டார் ஃப்ரூட்-ல் இருக்கும் நன்மைகள் !!
Sidhanathan K
இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர்.
தமிழில் விளிம்பிப்பழம் என்று அழைக்கப்படுகிற ஸ்டார் ஃப்ரூட்ஸ் நம்ம ஊரில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய இடம் கொடைகானல்.
நட்சத்திரப் பழத்தைப் பற்றி பலருக்குத் தெரியாது. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர் மற்றும் இந்தோனேசியாவில் விளைகிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
ஸ்டார் பழத்தில் வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
ஸ்டார் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இப்பழம் மலச்சிக்கலை போக்குகிறது.
ஸ்டார் ஃப்ரூட்டை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம் குறையும்.
ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
நட்சத்திரப் பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரம்புகள் வலுவடைந்து இரத்த ஓட்டம் மேம்படும்.
பிரசவித்த தாய்மார்களுக்கு இப்பழம் ஒரு வரபிரசாதமாகும். இப்பழம் இயற்கை ஹார்மோன் மாத்திரையாகச் செயல்பட்டு பால்சுரப்பிற்கான ஹார்மோனைத் தூண்டி தாய்பாலை நன்கு சுரக்கச் செய்கிறது.
10 கிராம் ஸ்டார் பழத்தில் கார்போஹைட்ரேட்ஸ் - 6.73 கி, சர்க்கரை - 3.98 கி, கொழுப்பு - 0.33 கி, புரோட்டீன் - 1.04 கி, போலேட் - 12 கி, வைட்டமின் சி - 34.4 கி, பாஸ்பரஸ் - 12 மி.கி, பொட்டாசியம் - 133 மி.கி, துத்தநாகம் - 12 மி.கி உள்ளது.