Sidhanathan K       Mar 27, 2024

சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தும் ஸ்டீவியா பற்றி தெரியுமா..?

இனிப்பு சுவையுள்ள வெள்ளை சர்க்கரை மட்டுமல்ல, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, தேன் போன்ற அனைத்து வகையான இனிப்புகளும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானவை தான்.

அதனால்தான் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட துளசி வகையை சேர்ந்த ஸ்டீவியா எனும் இனிப்பு சுவையூட்டும் பொருள் பயன்படுத்தப்படுகிறது.

இதிலுள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெப்போட்டியோசைடு கலவைகள் சர்க்கரையை விட 50 முதல் 300 மடங்கு இனிப்பானவை.

ஸ்டீவியாவில், ஸ்டீவியோல் கிளைகோசைடுகள் மிகக் குறைவு என்பதால் இது உடலில் ஏற்படும் அழற்சியை தடுக்கிறது.

ஸ்டீவியாவில் கலோரிகள் ஏதும் இல்லாததால் நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. உடலில் குளுக்கோஸ் அளவை சீராக்கி, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

ஸ்டீவியா மூலம் உலகளவில் 5,000 க்கும் மேற்பட்ட உணவு மற்றும் பான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

உடல் எடை குறைப்பவர்களுக்கும் இந்த ஸ்டீவியா பெரிதும் உதவுகிறது.

ஸ்டீவியா சில வகையான புற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஸ்டீவியாவில் உள்ள கேம்ப்ஃபெரால்கள் கணைய புற்றுநோயின் அபாயத்தை குறைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் மிதமான அளவில் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories