Tap to Read ➤

முளைக்கீரையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

முளைக்கீரை பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும்.
HTML Tamil
முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள், சுண்ணாம்புச் சத்துகள் அதிக அளவில் இருக்கின்றன.
முளைக்கீரையை உணவுடன்  சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் கிடைக்கும்.
முளைக்கீரையில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்குவதுடன், கொலஸ்ட்ரால் அளவையும்  குறைக்கிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முளை கீரை கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் குணமாக்கும்.
முளைக்கீரையை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உடல்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால், பித்தம், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல் புண், அல்சர் போன்றவை குணமாகும்.
சொறி, சிரங்கு போன்ற நோயால் பாதிக்கப்படுவோர், முளைக்கீரையை தொடர்ந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
முளைக்கீரை சாற்றில், மஞ்சள், முந்திரி பருப்பை சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால், முகப்பரு, தேமல் மறைந்து, முகப்பொலிவு பெறும்.
முளைக் கீரையை குழந்தைகளுக்கு உணவுடன் தொடர்ந்து கொடுத்து வந்தால், குழந்தைகள் நன்கு உயரமாக வளர்ந்து விடுவார்கள்.