Tap to Read ➤

தேங்காய் நாரின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

தேங்காய்யைபோல் அதன் நாரும் பயன் தரக்கூடியது
HTML Tamil
பொதுவாக தேங்காய் மட்டைகளை குப்பையில் வீசிவிடுவோம். ஆனால், அதன் நற்பலன்களை பற்றி தெரிந்தால், இனி தூக்கி எறிய மாட்டோம்.
தேங்காய் நாரை எப்படி பயன்படுத்தினால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வோம்
தேங்காய் நாரை அரைத்து பொடியாக்கி, தினமும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிட்டால், மூலம் நோய் குணமாகும்
தேங்காய் நாரை சுத்தம் செய்து, அதன் உமியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி குணமாகும்.
மூட்டுவலி மற்றும் உடல் வலியால் அவதிப்படுவோர், கொதிக்கவைத்த தேங்காய் நார் தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் குணமாகும்.
தேங்காய் நாரிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது.
தேங்காய் நாரை அரைத்து, மஞ்சளுடன் கலந்து, உடலில் காயம்பட்ட இடத்தில் தடவி வந்தால், காயத்தின் வீக்கம் குறையும்.
தேங்காய் மூடியை எரிந்து பொடியாக்கி, சிறிது சோடா கலந்து, மஞ்சள் கரை படிந்த பற்களில் மசாஜ் செய்தால், மஞ்சள் கரை நீங்கி விடும்.
தேங்காய் நாரை கடாயில் சூடாக்கி அரைத்து, அந்தப் பொடியை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தேய்த்து வந்தால், நரை முடி கருமையாகும்.
தேங்காய் நார் இயற்கையானது என்பதால், இதன் மூலம் உருவாக்கப்படும் பொருட்களால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது,