Tap to Read ➤

கீரைகளில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

தினமும் கீரை சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
HTML Tamil
உணவில் அன்றாடம் பயன்படுத்தும் கீரைகளின் வகைகளையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் பற்றி தெரிந்து கொள்வோம்.
அரைக் கீரை

 சளி, இருமல், தொண்டைப் புண் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். உடல் சூடு, மலச்சிக்கல் நீங்கும். வாத நோய்களை கட்டுப்படுத்தும்.
அகத்திக் கீரை

உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து, குளிர்ச்சியை தரும். ஜீரண சக்தியை பெருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறு கீரை

சிறுநீரக நோய்கள், பித்தம், கண் மற்றும் காச நோய்களை குணப்படுத்தும். முகப்பொலிவு, உடல் வலு உண்டாகும்.
தண்டுக் கீரை

தண்டுக் கீரையை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண்கள் ஆறும். மலச்சிக்கல் சரியாகும்.
புளிச்ச கீரை

சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் விலகும். காச நோய் கட்டுப்படும். தேக பலம், அழகு கூடும்.
பொன்னாங்கண்ணி கீரை

கண் மற்றும் மூலநோய், மூட்டு வலியை குணமாக்கும். நெஞ்செரிச்சல் தணியும். மஞ்சள் காமாலை நோய்க்கு சிறந்தது.
வெந்தயக் கீரை

நீரிழிவு நோயை கு
ணமாக்கும். உடல் சூட்டை குறைக்கும். வாய் நாற்றம் சரியாகும். சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.
மணத்தக்காளி கீரை

வாய்ப்புண், குடல் புண், மூலச்சூடு, உடல் சூடு, நீர்க் கடுப்பு, மூலம், காமாலை போன்ற நோய்களை குணமாக்கும் திறன் கொண்டது.
முருங்கைக் கீரை

பித்தம், கண் நோய்கள், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் சூடு சரியாகும். நரம்புகள் வலிமையடையும், ஆண்மை பெருகும்.
முளைக் கீரை

குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சிக்கு சிறந்தது. சரும நோய்கள் குணமாகும். குடல் புண்கள், சிறுநீர் கோளாறுகள் சரியாகும்.