Tap to Read ➤

கிழங்கு வகைகளின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

பூமிக்கடியில் விளையும் கிழங்குகள் மருத்துவ குணம் கொண்டவை.
HTML Tamil
கருணைக்கிழங்கு

வைட்டமின்கள், மாவு மற்றும் புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. உடல் சூட்டை தணிக்கும். மூலம் நோய்யை குணப்படுத்தும்.
சர்க்கரைவள்ளி கிழங்கு

வைட்டமின்கள், பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு பலம் தரும். உடலிலுள்ள புண், சொறி, சிரங்குகளை குணமாக்கும்
சேப்பங்கிழங்கு

வைட்டமின்கள், இரும்பு, புரதச்சத்துகள் அதிகம் உள்ளன. மலச்சிக்கல் தீரும். உடல் சூட்டை தணிக்கும். நரம்புகளுக்கு வலுசேர்க்கும்.
சேனைக்கிழங்கு

புரதம், மாவுச்சத்து, வைட்டமின், கால்சியம், இரும்பு சத்துகள் உள்ளன. உடலுக்கு சக்தி கொடுக்கும். நீரழிவு, உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும். கீல்வாதம், தொழுநோய், மூலம் நோயையும் குணமாக்கும்.
உருளைக் கிழங்கு

இரும்பு மற்றும் புரத்தச்சத்து நிறுந்துள்ளது. உடல் உஷ்ணம், புண், சிரங்குகள் போன்றவற்றை குணமாக்கும்.
மரவள்ளிக்கிழங்கு

புரதம், கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இனிப்புச் சுவையானது. உடல் பலம் பெறும். வியாதிகளை குணமாக்கும் தன்மை கொண்டது.
பனங்கிழங்கு

புரதம், உயிர்ச்சத்துகள் அடங்கியுள்ளன. மலச்சிக்கலை போக்கும். உடல் அழகு பெறும். உடல் சூடு, எல்லா பித்த நோய்களை குணமாக்கும்.
கோரைக்கிழங்கு

உடல் சூட்டை தணிக்கும். உடல் வலு பெற உதவுகிறது. செரிமான சக்தியை அதிகரிக்கும். காய்ச்சலை குணப்படுத்தும் திறன் கொண்டது.
சிறுகிழங்கு

அதிக தாதுப் பொருள்களை கொண்டது. கண் பார்வை, எலும்பு பலத்திற்கு சிறந்தது
பீட்ரூட்

குளுக்கோஸ் சத்து நிறைந்துள்ளது. ரத்தத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கலை போக்கும். வயிற்று பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
முள்ளங்கி

வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. ஜீரண சக்தியை தரும். சளியை போக்கும். குடல் நோய்களை தீர்க்கும். வயிற்று வலியை குணமாக்கும்.
கேரட்

 நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கியுள்ளது. கண்கள், சருமம், உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. வாயு, பித்தம் குணமாகும்.