அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதேபோல், இது குறைந்த கொழுப்புச்சத்தை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அன்னாசி பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மினரல்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளன.
இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் உடல் எடையும் குறைய ஆரம்பிக்கிறது.
தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஓமம் கலந்து, அன்னாசிப்பழத்தை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், தொப்பை கறைய துவங்கும், உடல் எடையிலும் மாற்றம் காணலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் 4 ஸ்பூன் ஓமப்பொடி மற்றும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசி பழத்தை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி சாறு மட்டும் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே உடல் எடை குறைய துவங்கும்.
அன்னாசிப்பழத்தில் உள்ள Bromelain என்ற நொதி நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க தூண்டுகிறது. இதன் காரணமாக, உணவு செரிமானமும் எளிதாகிறது, செரிமான அமைப்பும் ஆரோக்கியமாகிறது.
அடிக்கடி ஏற்படும் தலைவலி, ஒற்றைத் தலைவலி, விக்கல், மூளைக் கோளாறுகள், செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல், மூட்டு வலி, பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும்.
கண்பார்வை தெளிவடைய, பித்தத்தை போக்க, தொண்டை கரகரப்பை சரிசெய்ய, தொண்டை அழற்சியை போக்க, பித்தம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்த, அன்னாசிப்பழ வற்றல் தீர்வு தருகிறது.
வயிற்றில் பூச்சிகள் இருந்தால், அன்னாசிப்பழ இலையை அரைத்து, ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்தால் பூச்சிகள் வெளியேறிவிடும்.