இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் 2023 ஆகஸ்ட் 10ல் வெளியானது.
தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனமான 'சன் பிக்சர்ஸ்' சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படத்தின் பிரமாண்ட வசூலை கொண்டாடும் விதமாக கலாநிதி மாறன் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமாருக்கு சொகுசு கார்களை பரிசளித்துள்ளனர்.
ஜெயிலர் திரைப்படம் தற்போது 25 நாட்களை நிறைவு செய்து வசூல் ரீதியாக 600 கோடியை கடந்துள்ளது.
2.0 படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் 600 கோடி வசூல் செய்துள்ள படங்கள் பட்டியலில் ஜெயிலர் திரைப்படம் உள்ளது.