Tap to Read ➤

உங்கள் பெயரில் எத்தனை மொபைல் நம்பர் இருக்குதுனு தெரியுமா ?

அதை கண்டுபிடித்து ப்ளாக் செய்வது எப்படி ?
Sidhanathan K
உங்கள் பெயரில் வேறு யாரோ சிம் கார்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று சந்தேகிக்கிறீர்களா?
அப்படி வேறொரு சிம் கார்டு இயங்குகிறது என்றால் அதை பிளாக் செய்யும் வசதியையும் தொலைத் தொடர்புத் துறை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் இயங்கும் அனைத்து மொபைல் எண்களின் டேட்டாத்தளமும் இந்த போர்ட்டலில் பதிவேற்றப்படுகிறது.
அடிப்படையில் இது ஸ்பேம்களை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டதாகும்.
முதலில் tafcop.dgtelecom.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும். அதன் பிறகு உங்கள் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.
Click here
உள்ளிட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அந்த OTPயை உள்ளிட்டு, உங்கள் பெயரில் இயங்கும் அனைத்து எண்களின் முழுமையான பட்டியலைப் பெறலாம்.
அந்த பட்டியலில் வேறு ஏதேனும் மொபைல் எண் வேலை செய்தால், இந்த இணையதளம் மூலம் அந்த எண்ணைப் பற்றி புகார் செய்து ப்லாக் செய்துகொள்ளலாம்.