Tap to Read ➤

சாபங்களில் எத்தனை வகைகள் உள்ளன என தெரியுமா?

சாபங்களையும், பாவங்களையும் நற்காரியங்கள் செய்து தடுக்கலாம்.
HTML Tamil
மனது நொந்து சொல்லும் சொல்லே சாபமாகும். மூத்தவர்களோ, பெற்றோர்களோ சாபமிட்டால், அவை பல ஜென்மத்திற்கும் தொடரும் என கூறப்படுகிறது.
மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அவை என்னென்ன சாபங்கள் என்பதை தெரிந்துகொள்வோம்.
பெண் சாபம்

பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பது, மனைவியை கைவிடுதல் போன்றவையால் இந்த சாபம் ஏற்படுகிறது. இந்த சாபத்தால் வம்சம் அழியும் என சொல்லப்படுகிறது.
பிரேத சாபம்

இறந்தவரின் உடலை இழிவாகப் பேசுவது, இறுதி சடங்குகளை செய்யவிடாமல் தடுப்பது போன்றவைவை இந்த சாபம் ஏற்படுகிறது. பிரேத சாபத்தால் ஆயுள் குறையும் என்பது ஐதீகம்.
பிரம்ம சாபம்

நமக்கு கற்றுத்தந்த குருவை மறப்பது, கற்ற வித்தையை தவறாக பயன்படுத்துவது, பிறருக்கு கற்றுக் கொடுக்காமல் இருப்பதால் இந்த சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் படிப்பு வராமல் போகும்.
சர்ப்ப சாபம்

பாம்புகளை தேவையின்றி கொல்வது, அதன் இருப்பிடங்களை அழிப்பதால் சர்ப சாபம் உண்டாது. இதனால் திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்

முன்னோர்களுக்கான திதி, பெரியவர்களை உதாசீனம் செய்வது, ஒதுக்குவதால் இந்த சாபம் ஏற்படும். வசம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது ஆகியவை நிகழும்.
கோ சாபம்

பசுவை வதைப்பது, கன்றுடன் கூடிய பசுவை பிரிப்பது போன்றவற்றால் இந்த சாபம் ஏற்படுகிறது. இந்த சாபத்தால், குடும்பம் மற்றும் வம்சத்தில் வளர்ச்சி இல்லாமல் போகும்.
பூமி சாபம்

 பூமியை காலால் உதைப்பது, பாழ்படுத்துவது, அடுத்தவர் நிலத்தை பறிப்பதால் இந்த சாபம் ஏற்படுகிறது. பூமி சாபம், நரக வேதனைகளைக் கொடுக்கும்.
கங்கா சாபம்

குடி நீரை பாழ் செய்வது, ஓடும் நதியை அசுத்தம் செய்வதால் இந்த சாபம் உண்டாகும். கங்கா சாபத்தால், நிலத்தில் எவ்வளவு குழி தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்

பச்சை மரத்தை வெட்டுதல், பட்டுபோகச் செய்தல், மரத்தை எரித்தல் போன்றவை விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். இந்த சாபத்தால் கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்றவற்றால் இந்த சாபம் உண்டாகும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்து விடுவர்.
ரிஷி சாபம்

ஆச்சாரிய புருஷர்களையும், பக்தர்களையும் அவமதிப்பது ஆகியவற்றால் ரிஷி சாபம் ஏற்படும். இந்த சாபத்தால் வம்சம் அழியும்.
முனி சாபம்

 எல்லைத் தெய்வங்கள் மற்றும் சிறு தெய்வங்களின் பூஜையை மறந்தால் முனி சாபம் ஏற்படும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு ஏற்படும்.
குலதெய்வ சாபம்

நம் முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வத்தை வணங்காமல் இருந்தால் குலதெய்வ சாபம் உண்டாகும். இந்த சாபத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படாமல், ஒருவித துக்கம் சூழ்ந்துகொண்டே இருக்கும்.