Tap to Read ➤

உலகக் கோப்பை கால்பந்து பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்றாலே கோடிக் கணக்கில் பரிசு மழைதான்!
HTML Tamil
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர், கத்தாரில் நவம்பர் 20-ம் தேதி, கோலாகலமாகத் தொடங்குகிறது.
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்காக, கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து, கத்தார் அரசு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்துள்ளது.
ஃபிஃபா கால்பந்து போட்டியை நடத்துவதால், முதல்முறையாக, உலகக்கோப்பை கால்பந்திலும் கத்தார் அணி இடம்பெற்றுள்ளது.
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் அணிகள் மற்றும் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத் தொகை விவரங்கள் வெளியாகியுள்ளது.
கத்தாரில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.3,586 கோடி ரூபாயாகும்.
ரஷ்யாவில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியை விட, தற்போதையை பரிசு த ரூ.328 கோடி ரூபாய் அதிகமாகும்.
உலகக்கோப்பையை வென்று, சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு, ரூ.342 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.
இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.244 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.219 கோடி ரூபாயும், 4-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.203 கோடி ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
காலிறுதி வரை முன்னேறி, பின்னர் தோல்வியடைந்து வெளியேறும் அணிகளுக்கு தலா ரூ.138 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
2-வது சுற்றில் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா ரூ.105 கோடியும், லீக் சுற்றிலேயே வெளியேறுகிற அணிகளுக்கு தலா ரூ. 73 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.