நம் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது இந்த வாழை இலை
வாழை மரத்தில் உள்ள அனைத்து பகுதியும் பயனுள்ளதாகவும், அதில் பல மருத்துவ குணநலன்கள் உள்ளது
வாழை இலை, வாழை தண்டு, வாழை பூ, வாழை காய், வாழை பழம் என வளரும் ஒவ்வொரு கட்டத்திலும் பயன்படுத்த முடியும்
வாழை இலைக்கு இப்பெயர் வருவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு
அக்காலத்தில் கருவுற்ற பெண்கள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பாதுகாக்க வாழை இலையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது
அதாவது குறைப்பிரசவ குழந்தையை வாழை இலையில் வைத்து, மற்றொரு வாழையிலையினால் போர்த்தி குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டது
அப்படி உயிர் வாழ வாழை இலை உதவியதால், "வாழை இலை" என பெயர் வந்ததாக கூறப்படுகிறது