உடல் பருமன் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவை கல்லீரல் பாதிப்பிற்கு முக்கிய காரணங்கள். கீரை மற்றும் முட்டைகோஸை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது கல்லீரலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.
குறிப்பாக கீரையில் உள்ள சத்துக்கள், இன்சுலின் அளவை சமன் செய்து, டைப் 2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நிவாரணம் தருகிறது. இதனால் கல்லீரல் புற்றுநோயையும் தடுக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
கீரையை பொறுத்த வரையில் கரிசலாங்கண்ணி கீரையை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த கீரையை உணவில் வந்தால் கல்லீரல் மட்டுமின்றி, மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளும் பலம் பெறும்.
நீரிழிவு நோயாளிகள் இந்த கீரையை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் இது நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்தும். இந்த கீரை உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பையும் கரைக்கிறது.
அதேபோல் கீழாநெல்லி கீரையை விழுதாக அரைத்து மோரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை மட்டுமின்றி சர்க்கரை நோயும் குணமாகும். அதோடு உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
கீழாநெல்லி இலையை உலர்த்தி அதனுடன் அதிமதுரம், சீரகம் கலந்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். அதோடு, கல்லீரலில் ஏற்படும் புற்றுநோயை கூட தடுத்துவிடுமாம்.
கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் சீரகப் பொடி, தேன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
மஞ்சள் காமாலை தவிர, ஹெபடைடிஸ்-பி மற்றும் ஹெபடைடிஸ்-சி தொற்றுகளை குணப்படுத்தும் திறன் இந்த கீழாநெல்லிக்கு உண்டு.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி ஆகிய 2 கீரைகளை சம அளவு எடுத்து விழுதாக அரைத்து, பால் அல்லது மோரில் கலந்து 7 நாட்கள் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ஈரல் வீக்கமும் குறையும்.
ஆனால் இவை இரண்டும் மூலிகை இலைகள் என்பதால் அந்த நாட்களில் புளி, உப்பு, எண்ணெய் சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். ஆனால், மருந்தாக உட்கொள்ளும் போது, மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகே உட்கொள்ள வேண்டும்.
இந்த கீரையை தவிர, கல்லீரலை பாதுகாப்பதில் அரச மர இலைகளும் முக்கிய பங்காற்றுகின்றன. அரச மர இலைச்சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.
அதேபோல, வாரத்திற்கு 3 முறை சிறுபசலை கீரையை கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கமும் குணமாகிறது.
ஒட்டுமொத்தமாக, தாதுக்கள், வைட்டமின்கள் பி, சி மற்றும் குளுதாதயோன் நிறைந்த உணவுகளை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.