Sidhanathan K       Jan 15, 2024

சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய 3 மீன்கள்..!!

மீன்களில் அதிகமுள்ள ஒமேகா-3 அமிலங்கள், இன்சுலின் எதிர்ப்பை தடுப்பதிலும், இதய நோய் அபாயத்தை குறைப்பதிலும், புரதங்கள், வைட்டமின் டி, பி5 போன்ற சத்துக்களை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.

அந்தவகையில், அதிக புரதச்சத்து நிறைந்த சால்மன், ஹெர்ரிங் போன்ற கொழுப்பு மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. வளர்ச்சிதை குறைபாட்டையும் இந்த மீன்கள் குறைக்கின்றன.

அதேபோல, ஜிலேபி கெண்டை, டுனா மீன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சங்கரா மீனில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளும் தடுக்கப்படுகின்றன.

சங்கரா மீன்

அதுமட்டுமின்றி, இன்சுலின் எதிர்ப்பை குறைக்க சங்கரா மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி12 நரம்பு செல்கள் மற்றும் இரத்த சிவப்பணுக்களை பராமரிக்க உதவுகிறது.

100 கிராம் மத்தி மீனில், புரதச் சத்து 20.9 கிராம், கொழுப்புச் சத்து 10.5 கிராம், சாம்பல் சத்து 1.9 கிராம், நீர்ச்சத்து 66.70 கிராம். கொழுப்பு, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

மத்தி மீன்

எல்லாவற்றிற்கும் மேலாக, மத்தி மீனில் ஒமேகா 3 நிறைந்திருப்பதால் அனைத்து இதய நோய்களுக்கும் மருந்தாகும். இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தைரியமாக சாப்பிடலாம்.

கானாங்கெளுத்தி என்ற அயிலை மீனில் அதிக புரதச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளின் ஆபத்தை குறைப்பதோடு, மாலைக் கண் நோய் வருவதையும் தடுத்துவிடுமாம்.

கானாங்கெளுத்தி

இந்த மீன்கள் அனைத்தும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories