Tap to Read ➤

சிவப்பு கொய்யாவின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா?

சிவப்பு கொய்யா  கண்களை பாதுகாக்க உதவுகிறது.
HTML Tamil
கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உண்டு. ஒரு வகை பழம் உள் பக்கம் சிவப்பாக இருக்கும். மற்றொன்று வெள்ளை நிறமாக இருக்கும்
இந்த இரண்டு வகை கொய்யா பழங்களும் நிறத்தில் மட்டுமல்ல, அவற்றின் குணத்திலும் வேறுபட்டு காணப்படுகின்றது.
குறிப்பாக, சிவப்பு நிற கொய்யா பழத்தில், கரோட்டீனாய்டு என்னும் நிறமி, நீர்ச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C சத்துக்களும் உள்ளன.
சிவப்பு நிற கொய்யாப் பழத்தை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சிவப்பு நிற கொய்யா பழத்தில் உள்ள விட்டமின் A சத்துக்கள், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
சிவப்பு நிற கொய்யா பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், கண்பார்வை பிரச்சனைகள் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கலாம்.
உடம்பில் இருக்கும் பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமை படுத்துகிறது.
வயிற்று பிரச்சனைகளை தடுத்து, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலியைக் குணப்படுத்துகிறது. உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது.
நீரிழிவு நோய் உடையவர்கள் சிவப்பு நிற கொய்யா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
சிவப்பு நிற கொய்யா பழத்தை சாப்பிட்டால், உடம்பில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு கொய்யாப்பழம், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.
சிவப்பு கொய்யாப்பழம் கெட்டக் கொழுப்பினை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது
சிவப்பு கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்க முடியும்.