Tap to Read ➤

பெண்கள் அணியும் ஆபரணங்களும் அவற்றின் சிறப்பும் தெரியுமா ?

ஆபரணங்களின் முக்கியத்துவம்..!!
Sidhanathan K
1. தாலி

தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் தரும் பரிசு சின்னம்.
2. தோடு

எதையும் காதோடு போட்டுக் கொள், வெளியில் சொல்லாதே !
காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.
3. மூக்குத்தி

மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
மூக்குத்தி அணிவதால் பெண்களுக்கு மூக்கு சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடது பக்கம் அணிவதால் சிந்திக்கும் சக்தியும் மனமும் நிலைபெறும்.
4. வளையல்

கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும் என்பதற்காக.
5. ஒட்டியாணம்

கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம்

எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.
விரல்களில் அணியும் மோதிரம் பதற்றத்தை குறைக்கவும், இனிமையான பேச்சுத்திறன், அழகான குரல் ஆகியவற்றின் வளத்திற்கு உதவுகிறது.
விரல்களில் மோதிரங்கள் அணிவதால் இதய பிரச்சனைகள் மற்றும் வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
7. கொலுசு

வெள்ளி கொலுசு குதிகால் நரம்பைத் தொடுவதால், குதிகால் நரம்பு வழியாக மூளைக்குச் செல்லும் தூண்டுதல்களைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
8. மெட்டி

பெண்களில், கருப்பையின் முக்கிய நரம்புகள் கால்விரல்களில் உள்ளன. வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்தம் கால்களின் நரம்புகளில் ஊடுருவி நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.