Sidhanathan K       Sep 19, 2023

டிடிஎஃப் வாசன் பயன்படுத்தும் ஹெல்மெட் விலை என்ன தெரியுமா..?

டிடிஎஃப் வாசன் நேற்று முன் தினம் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது விலையுயர்ந்த பைக்கில் வீலிங் செய்தார்.

அப்போது பைக் தடுமாறி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட டிடிஎஃப் வாசன் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினார்.

மோட்டார் வாகன சட்டப்படி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதாக வாசன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்து டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் வைத்திருக்கும் ஹெல்மெட் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

பைக் ரேசிங் உலக நாயகன் வாலன்டினா ரோசி பயன்படுத்தும் AGV Pista GP RR ஹெல்மெட் தான் அது.

அவரது கையெழுத்தும், கைரேகையும் பொறிக்கப்பட்டிருக்கும் ஸ்பெஷல் எடிசன் ஹெல்மெட்டை வாசன் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த AGV Pista GP RR ஸ்பெஷல் எடிசன் ஹெல்மெட்டின் விலை ரூ.1.5 லட்சம். 

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories