சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் கயலாக சைத்ரா ரெட்டியும், எழிலாக சஞ்சீவும், முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபலங்களும் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதில் சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ.25,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது.
சஞ்சீவுக்கு சம்பளமாக ரூ.20,000 வழங்கப்படுகிறது.
விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடிக்கும் கோபி மற்றும் அவரது மனைவி தேவியாக நடிக்கும் ஐஸ்வர்யாவிற்கும் ரூ.8,000 முதல் 10,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
அது போல் காமாட்சி, மூர்த்தி, தனம், தர்மலிங்கம் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் ஊதியமாக கொடுக்கப்படுகிறது.
மற்றவர்கள் சில காட்சியில் மட்டும் நடிப்பதால் அவர்களுக்கு ரூ.10000-ஐ விட ஊதியம் குறைவுதானாம்.