Tap to Read ➤

ட்ரையல் ரூம் கண்ணாடியில் இருக்கும் ட்ரிக் பற்றி தெரியுமா ?

உடை மாற்றும் அறைகளில் வைக்கப்படும் கண்ணாடிகள்..!!
Sidhanathan K
பெரிய துணிக்கடைகளில் நமக்கு பிடித்த ஆடையை போட்டு பார்க்க ட்ரையல் ரூமை பயன்படுத்துவோம்.
அங்குள்ள கண்ணாடியில் எந்த உடை போட்டாலும் நமக்காகவே தைத்தது போல இருக்கும்.
போட்டு பார்த்த ஆடைகளை எல்லாம் பிடித்து போய் பில் போட்டு வீட்டுக்கு போய் வீட்டுக்கண்ணாடி முன் போட்டு பார்த்தால் வித்தியாசம் தெரியும்.
ட்ரையல் ரூமில் உள்ள கண்ணாடியில் பிட்டாக இருப்பது போல காட்டிய அதே உடை இங்கு சதை பிதுங்கி இருப்பது போல் காட்டலாம்.
அதென்ன அங்கு நன்றாக தெரிந்த உடை நம் வீட்டுக் கண்ணாடி கேவலமாக காட்டுகிறது என்று பார்த்தால் அங்கு தான் ட்ரிக் ஒன்று உள்ளது.
துணிக்கடையில் உள்ள கண்ணாடிகளின் பருமன் குறைவு. அதனை செங்குத்தாக சற்று நீட்டி பக்க வாட்டில் சற்று வளைத்து வைத்திருப்பார்கள்.
இந்த கண்ணாடியில் நம்மை பார்க்கும்போது, நமது உருவம் சற்று உயரமாகவும், உடலை மிகவும் ஒல்லியாக காட்டும். இப்படி செய்வது Optical illusion ஆகும்.
நமது கண்ணை வைத்தே நம்மை ஏமாற்றுவதுபோல, எந்த உடை போட்டாலும் அழகாக தெரிந்திருக்கிறோம்.
வீட்டுக்கண்ணாடிகளில் சற்று பருமன் அதிகம். அதனை வளைக்க முடியாது, நம் உருவத்தை அப்படியே பிரதிபலிக்கும்.
அதனாலே சூப்பரான உடை போட்டால் கூட சுமாராக தெரிகிறோம்.