Tap to Read ➤

சைபர் குற்றங்களாக கருதப்படுபவை என்னென்ன தெரியுமா..?

சைபர் குற்றங்களின் வகைகள் !!
Sidhanathan K
இன்றைய உலகில் தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கை முறைகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக தகவல்கள் திருடப்படுவதால், தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.
அவ்வாறு நிகழும் சைபர் குற்றங்கள் பல வகைகளில் உள்ளன.
தகவல் தொழிநுட்ப சேவைகளை திருடுவது (Data Hijack)
தகவல்களை அழிப்பது.
இணையத்தில் முகம் தெரியாதவர்களை ஏமாற்றுவது
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களிலிருந்து தகவல்களை திருடுவது (Hacking, Virus/Worm attacks, DOS attack etc)
மற்றவர்களின் தகவல்களையோ, புகைப்படங்களையோ தவறாக பயன்படுத்துவது.
சட்டத்திற்கு புறம்பான பாலியல் குற்றங்களை இணையம் மூலம் ஏற்படுத்துவது (Pornography)
மின்னஞ்சல் மற்றும் இன்டர்நெட் கால் மூலம் கொலை மிரட்டல்கள்
இணையவழி பொருளாதார குற்றங்கள் (Cyber Terrorism, IPR violations, Credit card frauds, EFT frauds)
மற்றவர்களின் மின்னஞ்சல் மற்றும் சோசியல் நெட்வொர்கிங் கணக்குகளை திருடி அவதூறு பரப்புவது.