நெற்றியில் திருநீறு பூசுவது பல உள்ளர்த்தங்களை கொண்டதாக அறியப்படுகிறது.
நெற்றியில் பிரம்மன் எழுதிய தலையெழுத்தை அழித்து, இறையருளை பதிக்கும் தன்மையும் திருநீற்றுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது.
விபூதிக்கு இரட்சை, சாரம், பஸ்மம், பசிதம், திருநீறு என நிறைய பெயர்கள் உள்ளன.
பசுமாட்டு சாணத்தை எரித்துதான் திருநீறு தயார் செய்யப்படுகிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
மாடு அருகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு இடும் சாணத்தை தீயிலிடும்போது ஏற்படும் ரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையாக அமைகிறது.
நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்வது எதிர்மறை ஆற்றல்கள் அல்லது தீய எண்ணங்கள் அல்லது தீயசக்திகளை நம்மிடம் நெருங்க விடாது.
மனித உடலிலேயே நெற்றி மிக முக்கிய பாகமாக கருதப்படுகிறது. 2 புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன.
திருநீறை நெற்றியில் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே அந்த நுண்ணிய நரம்புகள் தூண்டப்பட்டு, அதற்கான சரியான பலன் கிடைக்கும்.
விபூதியை நீரில் குழைத்து நெற்றியில் பூசினால் கபாலத்தில் உள்ள நீர் வற்றி பல வியாதிகள் நீங்குகிறது.
திருநீறானது நல்ல அதிர்வுகளை உள்வாங்கும் தன்மை உடையது. எனவே, உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்வதால் அந்த இடங்களிலெல்லாம் வலிமை அதிகமாகும் என்கிறார்கள்.
நம் உடலில் எலும்புகள் சேரும் மூட்டுப் பகுதிகளில் தினமும் திருநீறு பூசி வந்தால், அந்த மூட்டுகளில் தேங்கியிருக்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றும்.
இதனால் எலும்பு தேய்மானம், சவ்வு கிழிதல் போன்ற மூட்டு சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும்.