Tap to Read ➤

முகத்திற்கு ஆவி பிடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

முகத்திற்கு ஆவி பிடித்தால் சருமம் பொலிவு பெறும்.
HTML Tamil
இயற்கையான தைலம், நொச்சி இலை, துளசி, மஞ்சள், மிளகு, எலுமிச்சை, கிராம்பு போன்றவற்றை சுடுதண்ணீரில் போட்டு முகத்திற்கு ஆவி பிடிக்கலாம்.
முகத்திற்கு ஆவி பிடித்தால், ஜலதோசம், சளி, இருமல், காய்சல், தலைவலி உடனடியாக குணமடையும்.
முகத்திற்கு ஆவி பிடித்தால், சருமத்திற்கும் நன்மை ஏற்படுகிறது. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும்.
முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி, முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் முகப்பருக்களை கட்டுப்படுத்தலாம்.
சூடான தண்ணீரில் ஆவி பிடிக்கும்போது நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் வெளியேறிவிடும்.
முகத்திற்கு ஆவி பிடிப்பதால், தொண்டையில் உள்ள வைரஸ் தொற்றுகள் அழிவதோடு, மார்பு சளியையும் கரைத்து விடும்.
முகத்திற்கு ஆவி பிடித்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பளிசிடுவதோடு, இளமைத் தோற்றத்தையும் தரும்.
முகத்திற்கு ஆவி பிடிக்கும் போது, முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் கிடைக்கும்
ஆவி பிடிக்கும் போது மிதமான சூட்டில் பிடிக்க வேண்டும். அதிக சூட்டில் பிடிப்பதை தவிர்ப்பது நல்லது.
சரும அழகையும் ஆரோக்கியத்தையும் பேண நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை ஆவி பிடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.