Tap to Read ➤

மூட்டு வலிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்ன தெரியுமா?

மூட்டு வலி ஒருவரின் இயக்கத்தை குறைத்து விடுகிறது.
HTML Tamil
பொதுவாக 40 வயதைக் கடந்து விட்டால் எல்லோருக்கும் வரும் பிரச்சனை மூட்டு வலியாகும்.
உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரை வியாதி ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மூட்டு வலி உண்டாகும் வாய்ப்பு அதிகம் உண்டு.
மூட்டு வலிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மூட்டு வலி என்பது எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வலியின் முதல் அறிகுறியாகும்.
கால் மூட்டுகளில் முதலில் எரியும் உணர்வுடன் ஒரு மந்தமான வலி ஏற்பட்டு, பின்னர் வலியை மேலும் அதிகரிக்கும்.
அதிகாலை வேளையில் காலை நீட்டி மடக்க முடியாத அளவுக்கு விறைப்பாக இருக்கும்.
மூட்டுகளில் வலி, வீக்கம், மூட்டு இருக்கும் பகுதியில் சிவந்து காணப்படும்.
மூட்டு வலியால் எடை குறைதல், காய்ச்சல், களைப்பு போன்றவை உண்டாக கூடும்.
மூட்டு வலி இருப்பதால் அது தசைகளில் சக்தியை குறைத்து விடும். தசைகளை தேய்மானத்துக்கு உள்ளாக்கும்.
தொடர்ந்து மூட்டு வலிகள் இருந்தால், கால் மூட்டுகளை மடக்கி நீட்டும் சக்தி குறையக்கூடும்.
மூட்டுகளின் அசைவுகள் குறைந்துவிட்டால், உட்கார்வது, எழுந்து நிற்பது, நடக்கும் சமயங்களில் வலி ஏற்படும்.