Tap to Read ➤

பச்சை மிளகாயின் மருத்துவ பயன்கள் என்னென்ன தெரியுமா?

பச்சை மிளகாய் என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் காரம்தான்.
HTML Tamil
பச்சை மிளகாயில் வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
அன்றாடம் சமையலுக்கு சேர்க்கப்படும் பச்சை மிளகாய், உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்பதை தெரிந்துகொள்வோம்.
பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பச்சை மிளகாயில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உணவு செரிமானம் வேகமாக நடைபெற உதவுகிறது.
பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளதால், உடலில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
சர்க்கரை நோயாளிகள் பச்சை மிளகாயை சரியான அளவில் உணவில் சேர்த்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலைப்படும்
பச்சை மிளகாயில் சிலிகான் சத்து அதிகம் இருப்பதால் தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வதை தடுக்கிறது.
பச்சை மிளகாயில் உள்ள மக்னீசியம், இரும்பு சத்து, சீரான இதய துடிப்பிற்கும், ரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
பச்சை மிளகாய், உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது.
பச்சை மிளகாய், சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுகளை அழித்து, இந்த பிரச்சனையில் இருந்து குணமாக உதவுகிறது.