Tap to Read ➤

சிறுநீரகத்தை பாதிக்கும் பழக்கங்கள் என்ன தெரியுமா?

சில தவறான பழக்க வழக்கங்கள் சிறுநீரகத்தை பாதிப்படைய செய்கிறது.
HTML Tamil
பசியின்மை, உணவில் நாட்டமின்மை, வாந்தி, முகம், அடி வயிறு அல்லது பாதங்கள் வீங்குவது போன்றவை சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகளாகும்.
என்னென்ன தவறான பழக்கவழக்கங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும் என்பதை தெரிந்துகொள்வோம்.
நாள்தோறும் மது அருந்துவது, சிறுநீரக செயலிழப்புக்கு காரணமாகி, கடும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
தேவையான அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடா விட்டால், சிறுநீரகம் பாதிக்கப்படும் சூழல் உண்டாகும்.
சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டால், சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படும்.
நீண்டகாலமாக உடல் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும், சிறுநீரக பாதிப்பை உண்டாக்கலாம்.
உணவில் அதிக அளவு உப்பு சேர்த்தால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
தினமும் காஃபியை அதிகம் அளவு குடித்தால், சிறுநீரகத்தில் கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
உடலுக்குத் தேவையான தண்ணீரை அருந்தவில்லை என்றால், சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு விடும்.
சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்க முயன்ற வரையில் எளிதான உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.